Published : 23 Sep 2017 10:05 AM
Last Updated : 23 Sep 2017 10:05 AM

2-வது இடத்தில் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் பி.வி.சிந்து இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான சிந்து, தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் சிந்து 2-வது இடம் பிடித்திருந்தார். சீன தைபேவின் சூ யிங், மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் சாய்னா நெவால் 12-வது இடத்திலும், ரியோ ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரின் 5-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

உலக சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற ஜப்பானின் நோஸோமி ஓகுஹரா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x