

புதுடெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டைப் போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் நீத்து கங்காஸ், பிரீத்தி, மஞ்சு பாம்போரியா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மகளிர் 48 கிலோ பிரிவில் நீத்து கங்காஸ், கொரியாவின் டோயான் காங்கையும், 54 கிலோ பிரிவில் பிரீத்தி, ருமேனியாவின் லாக்ராமியோராவையும், 66 கிலோ பிரிவில் மஞ்சு பாம்போரியா நியூஸிலாந்து கார் வார்ராவையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.