ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் இன்று ஏடிகே மோகன் பகான் - பெங்களூரு மோதல்

ஐஎஸ்எல் இறுதிப் போட்டியில் இன்று ஏடிகே மோகன் பகான் - பெங்களூரு மோதல்
Updated on
1 min read

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள நேரு விளையாட்டரங்கில் ஏடிகே மோகன் பகான் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஏடிகே மோகன் பகான் அணி அரை இறுதி சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் பெங்களூரு அணியானது மும்பையை தோற்கடித்து இருந்தது. ஏடிகே மோகன் பகான் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால் பதித்துள்ளது. இந்த 5 ஆட்டங்களிலும் அந்த அணி ஒரு கோல் மட்டுமே வாங்கி இருந்தது. லீக் சுற்றில் அணியின் டிபன்ஸ் பலமாக இருந்தது.

இந்த சீசனில் ஏடிகே மோகன் பகான் 17 கோல்களை மட்டுமேவாங்கி உள்ளது. ஹைதராபாத் அணிக்கு பிறகு குறைந்த கோல்களை வாங்கிய அணியாக ஏடிகேமோகன் பகான் திகழ்கிறது. டிபன்ஸ்பேக்லைனில் பிரித்தம் கோட்டல், பிரண்டன் ஹமில், ஸ்லாவ்கோ டம்ஜனோவிக் வலுவாக திகழ்கின்றனர். வலதுபுறத்தில் ஆஷிஸ் ராய் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய வீரராக இருக்கிறார்.

ஐஎஸ்எல் தொடரில் ஏடிகே மோகன் பகான், பெங்களூரு அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர்மோதி உள்ளன. இதில் ஒரே ஒருமுறை மட்டுமே பெங்களூரு அணிவெற்றி பெற்றுள்ளது. 4 ஆட்டங்களில் அந்த அணி தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஏடிகே மோகன் பகான் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in