

ஒலிம்பிக் மகளிர் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் சாலி பியர்சனுக்கு பின் தொடைத் தசைநாரில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மகளிர் 100 மீ. ஓட்டம் வரும் திங்கள் கிழமையும், மகளிர் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி யும் நடைபெறவுள்ளன. இந்த நிலை யில் செய்தியாளர்களைச் சந்தித்த பியர்சன், “அடுத்த 48 மணி நேரத் தில் நான் போட்டியிலிருந்து விலக நேரிடலாம். தற்போதைய நிலையில் அதுபோன்ற சூழலில்தான் இருக்கி றேன். இதுதொடர்பாக எனது பயிற்சி யாளரிடமும் ஆலோசனை நடத்தி யிருக்கிறேன்” என்றார்.