IND vs AUS 1st ODI: சமி, சிராஜ் வேகத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா - இந்தியாவுக்கு 189 ரன்கள் இலக்கு

IND vs AUS 1st ODI: சமி, சிராஜ் வேகத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா - இந்தியாவுக்கு 189 ரன்கள் இலக்கு
Updated on
1 min read

மும்பை: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வாகை சூடியது. முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி மிட்செல் மார்ஸ், ட்ராவிஸ் ஹெட் இணை ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் கொடுத்தது.

ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சிறப்பான தொடக்கமாக அமையவில்லை. ட்ராவிஸ் ஹெட்டை (5) முஹம்மது சிராஜ் முதல் ஓவரிலேயே வெளியேற்றினார். அடுத்ததாக களத்திற்கு வந்த ஸ்டீவன் ஸ்மித் மிட்செல் மார்ஸுடன் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 12 ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த இணையை ஹர்திக் பாண்டியா பிரித்து வெளியேற்றினார்.

ஸ்மித் 22 ரன்களில் வெளியேற, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் 81 ரன்களில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 129 ரன்களை சேர்த்தது. ஆனால், அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் யாரும் சோபிக்காததால், விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிய 35.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா.

இந்திய அணி தரப்பில் முஹம்மது சமி, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in