

ராவல்பிண்டி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த நூறு சதங்கள் சாதனையை இந்திய வீரர் விராட் கோலி நிச்சயம் தகர்ப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இதே நாளில் (மார்ச் 16) கடந்த 2012-ல் சச்சின் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில், அக்தர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலி தனது 75-வது சர்வதேச கிரிக்கெட் சதத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கோலி விளையாட உள்ளார்.
“விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவது புதிது அல்ல. அவர் கேப்டன்சி அழுத்தத்தை எதிர்கொண்டு வந்தார். இப்போது அதில் இருந்து வெளிவந்துள்ளார். அவரால் ஆட்டத்தில் அதீத கவனம் செலுத்தி இனி விளையாட முடியும். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 110 சதங்கள் பதிவு செய்வார் என நான் நம்புகிறேன். சச்சினின் நூறு சதங்கள் சாதனையை அவர் நிச்சயம் தகர்ப்பார். அடுத்த மூன்று ஆண்டுகளில் இது நடக்கலாம். களத்தில் பீஸ்ட் மோடில் அவர் தொடர்ந்து ரன் சேர்ப்பார்” என அக்தர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்