“தோனி நல்ல ஃபிட்... பேட்டிங் சிறப்பு... 2024 சீசனிலும் விளையாட முடியும்!” - சுரேஷ் ரெய்னா

ரெய்னா மற்றும் தோனி | கோப்புப்படம்
ரெய்னா மற்றும் தோனி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2024 சீசனிலும் விளையாட முடியும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். தோனி, ஃபிட்டாக இருப்பதோடு, வலைப்பயிற்சியில் சிறப்பாக பேட் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 31-ம் தேதி ஐபிஎல் 2023 சீசன் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நரம்பு புடைக்க தெரியும் பைசெப்ஸ் மற்றும் ட்ரைசெப்ஸ் என வலைப்பயிற்சி மேற்கொள்ளும் தோனியின் அண்மைய புகைப்படமே ரெய்னாவின் கருத்துக்கு உயிர் சேர்க்கிறது. ‘சென்னை மண்ணில்தான் எனது கடைசி டி20 போட்டி இருக்கும்’ என தோனி முன்னர் சொல்லி இருந்தார். ஆனாலும் அது எப்போது என தோனி இதுவரை சொல்லவில்லை. அதனால் அது சஸ்பென்ஸாகவே உள்ளது.

“தோனி அடுத்த ஆண்டு கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடலாம். அது குறித்த விவரம் யாருமே அறிந்திருக்க மாட்டோம். அவரது உடற்திறன் மற்றும் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது அது நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனாலும், அது இந்த சீசனில் அவரது பேட்டிங் செயல்பாட்டை கொண்டே முடிவு செய்யப்படும்.

வலைப்பயிற்சியில் அவர் பறக்கவிடும் சிக்ஸர்களை பார்த்தால் நிச்சயம் அணியின் வெற்றிக்கு அவர் தனது பங்களிப்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் போட்டிகளில் விளையாடி ஓராண்டு காலம் ஆகிறது. அதனால் அது கொஞ்சம் சவாலாக இருக்கலாம்” என ரெய்னா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in