Published : 17 Sep 2017 13:00 pm

Updated : 17 Sep 2017 13:01 pm

 

Published : 17 Sep 2017 01:00 PM
Last Updated : 17 Sep 2017 01:01 PM

கொரிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, தன் அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹீ பிங்ஜியோவுடன் மோதி 21-10, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நோசாமியிடன் பி.வி.சிந்து மோதினார். இதில் நோசோமியை 22-20 11-21 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப் இறுதியில் நோசோமியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தார் சிந்து என்றே இதைச் சொல்லலாம்.கொரிய ஓபனில் இந்தியர் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author