Published : 31 Jul 2014 10:00 AM
Last Updated : 31 Jul 2014 10:00 AM

காமன்வெல்த்: லலிதா, பஜ்ரங்கிற்கு வெள்ளி

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் லலிதா, பஜ்ரங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

மகளிர் 53 கிலோ ப்ரீஸ்டைல் இறுதிச்சுற்றில் நைஜீரியாவின் அடிகுயோராயை எதிர்கொண்டார் இந்தியாவின் லலிதா. அரையிறுதியில் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் ஷனான் ஹாக்கை வீழ்த்திய லலிதாவின் ஆட்டம், அடிகுயோராவிடம் எடுபடவில்லை. இதனால் அவர் 0-5 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தோடு திரும்பினார்.

ஆடவர் 61 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் 1-4 என்ற கணக்கில் கனடாவின் டேவிட் டிரெம்ப்ளேவிடம் தோல்வி கண்டு தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதனால் அவருக்கும் வெள்ளியே மிஞ்சியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x