சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 நாட்களில் சத மழை பொழிந்த பேட்ஸ்மேன்கள்

பவுமா, கில் மற்றும் வில்லியம்சன் | கோப்புப்படம்
பவுமா, கில் மற்றும் வில்லியம்சன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 நாட்களில் சத மழை பொழிந்துள்ளனர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பேட்ஸ்மேன்கள். இந்தியா - ஆஸ்திரேலியா, இலங்கை - நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்த சதங்களை பேட்ஸ்மேன்கள் பதிவு செய்துள்ளனர்.

ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் லீக் தொடர்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அது தவிர பெரும்பாலான அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்களால் அதிகளவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை என வெளிப்படையாகவே கருத்து சொல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில், கிரிக்கெட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த கிளாஸான சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியா vs ஆஸ்திரேலியா (அதமதாபாத்)

  • உஸ்மான் கவாஜா - 180 ரன்கள்
  • கேமரூன் கிரீன் - 114 ரன்கள்
  • சுப்மன் கில் - 128 ரன்கள்
  • விராட் கோலி - 186 ரன்கள்

நியூஸிலாந்து vs இலங்கை (கிறைஸ்ட்சர்ச்)

  • டேரில் மிட்செல் - 102 ரன்கள்
  • ஏஞ்சலோ மேத்யூஸ் - 115 ரன்கள்
  • கேன் வில்லியம்சன் - 121 ரன்கள் (நாட் அவுட்)

தென்னாப்பிரிக்க vs மேற்கிந்திய தீவுகள் (ஜோகன்னஸ்பர்க்)

  • டெம்பா பவுமா - 172 ரன்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in