Published : 26 Sep 2017 10:35 AM
Last Updated : 26 Sep 2017 10:35 AM

பொறியியல் கல்லூரிகளுக்கான மாநில நீச்சல் போட்டியில் லயோலா–ஐசிஏஎம், செயின்ட் ஜோசப்’ஸ் அணிகள் சாம்பியன்

திருச்சி பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சென்னை லயோலா-ஐசிஏஎம், செயின்ட் ஜோசப்’ஸ் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்கள் பிரிவு 50மீ, 100மீ ப்ரீஸ்டைல், 50மீ பட்டர்பிளை, 200மீ தனிநபர் மெட்லி ஆகிய பிரிவுகளில் சென்னை செயின்ட் ஜோசப்’ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர் எம்.எஸ்.பவன் குப்தா முதலிடம் பிடித்தார். சென்னை லயோலா–ஐசிஏஎம் மாணவர் கே.அப்பாஸூதீன் 200மீ, 400மீ, 1500மீ ப்ரீ ஸ்டைல், 50மீ, 100மீ, 200மீ பேக்ஸ்ட்ரோக், 400மீ தனிநபர் மெட்லி ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்தார்.

கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.நித்யா ஆனந்த் 50மீ, 100மீ, 200மீ பிரஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார். சென்னை செயின்ட் ஜோசப்’ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர் பிரிதிவ்ராஜ் 100மீ பட்டர்பிளை போட்டியிலும், சென்னை எம்என்எம் ஜெயின் பொறியியல் கல்லூரி மாணவர் பி.லோகேஷ்குமார் 200மீ பட்டர்பிளை போட்டியிலும் முதலிடம் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் அண்ணா பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் மற்றும் பிளானிங் மாணவி முக்தா மல்லாரெட்டி 50மீ, 200மீ, 400மீ ப்ரீஸ்டைல், 50மீ, 100மீ, 200மீ பேக்ஸ்ட்ரோக், 50மீ, 100மீ, 200மீ பட்டர்பிளை, 50மீ, 100மீ பிரஸ்ட்ஸ்ட்ரோக் ஆகிய 11 போட்டிகளில் முதலிடம் பிடித்தார். சென்னை ஜோசப்’ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவி எஸ்.உமாதேவி 800மீ ப்ரீஸ்டைல், 200மீ, 400மீ தனிநபர் மெட்லி ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்தார். அதே கல்லூரி மாணவி எம்.பி சரிக்ஷா பாரதி 200மீ பிரஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் முதலிடம் பிடித்தார். சென்னை லயோலா–ஐசிஏஎம் மாணவி எஸ்.ஆர்த்தி 100மீ ப்ரீஸ்டைல் போட்டியில் முதலிடம் பிடித்தார்.

ஆண்கள் பிரிவில் லயோலா–ஐசிஏஎம் அணியும், பெண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப்’ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x