Last Updated : 15 Sep, 2017 04:11 PM

 

Published : 15 Sep 2017 04:11 PM
Last Updated : 15 Sep 2017 04:11 PM

கொரியா ஓபன்: அரையிறுதியில் சிந்து! ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் அரையிறுதிக்கு இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார், காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை மினட்சு மிடானியை 21-19, 16-21, 21-10 என்று வீழ்த்தினார் சிந்து.

முதல் இரண்டு செட்கள் மிகவும் நெருக்கமாக சவாலாக அமைந்த நிலையில் 3-வது செட்டில் சிந்து எழுச்சி கண்டார் 9-2 என்று ஜப்பான் வீராங்கனையைக் காட்டிலும் 7 புள்ளிகள் முன்னிலை பெற்றார். பிறகு 19-9 என்று 10 புள்ளிகள் முன்னிலை பெற்றார். ஒரு நேரத்தில் 8 புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார் சிந்து.

அரையிறுதியில் 3ம் தரவரிசையில் உள்ள சங் ஜி ஹியுன் அல்லது சீனாவின் ஹீ பிங்ஜியாவோவை சிந்து சந்திக்கலாம்.

முன்னதாக இந்தியாவின் சமீர் வர்மா, கொரியாவின் சன் வான் ஹோவிடம் காலிறுதியில் 20-22, 21-10, 21-13 என்று தோல்வியடைந்து வெளியேறினார். இதே சன் வான் முன்னதாக காஷ்யப்பையும் வெளியேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x