Published : 11 Mar 2023 05:51 AM
Last Updated : 11 Mar 2023 05:51 AM

இலங்கையுடன் டெஸ்ட்: நியூஸிலாந்து நிதான ஆட்டம்

கிறைஸ்ட்சர்ச்: இலங்கையுடனான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து நிதானமாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது.

நியூஸிலாந்து, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி 355 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

குசல் மெண்டிஸ் 87, மேத்யூஸ் 47, கருணாரத்னே 50, சண்டிமல் 39, தனஞ்செய டி சில்வ 46 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் கேப்டன் டிம் சவுதி 5 விக்கெட்களும், மேட் ஹென்றி 4 விக்கெட்களும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லேதம் 67, டெவன் கான்வே 30, கேன் வில்லியம்ஸன் 1, ஹென்றி நிக்கல்ஸ் 2, டாம் பிளண்டல் 7 ரன்கள் எடுத்தனர்.

டேரில் மிட்செல் 40 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரி குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களும், கசுன் ரஜிதா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x