Published : 16 Sep 2017 09:03 PM
Last Updated : 16 Sep 2017 09:03 PM

இந்திய ஒருநாள் போட்டி அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்ப்பு

அக்சர் படேல் காயமடைந்ததால் அவருக்கு மாற்றாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஜடேஜா, ஒருநாள் போட்டிகளில் சமீப காலமாக விக்கெட்டுகளை வீழ்த்தவும் ரன்களைக் கட்டுப்படுத்தவும் திணறி வருகிறார்.

ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஜடேஜா 62.25 என்ற சராசரியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிக்கன விகிதமும் ஓவருக்கு 5.92 ரன்கள்.

இதற்கு அடுத்தபடியாக மே.இ.தீவுகளில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை ஜடேஜா.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x