WPL | 10 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சாய்கா இஷாக்; 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

சாய்கா இஷாக்
சாய்கா இஷாக்
Updated on
1 min read

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் 10 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டவர் இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய்கா இஷாக். தன் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் அவர்.

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சோஃபி டெவின் மற்றும் திஷா கசத் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் அவர் கைப்பற்றி அசத்தினார். கடந்த 4-ம் தேதி குஜராத் ஜெயண்டஸ் அணிக்கு எதிராக 3.1 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.

27 வயதான அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். பஞ்சாப் அணிக்கு எதிரான சீனியர் மகளிர் டி20 தொடரின் போட்டியில் விளையாடி கவனம் ஈர்த்தவர். அந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் யாஸ்திகா பாட்டியா என இருவரது விக்கெட்டையும் அவர் கைப்பற்றி இருந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் ஆலோசகராக உள்ள ஜுலான் கோஸ்வாமியின் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்.

மேற்கு வங்க மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ரவுண்டு வந்தவர் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிக்காகவும் விளையாடி வருகிறார். நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதன் மூலம் இந்திய அணியில் தனக்கான வாய்ப்புக்காக அவர் பயிற்சியாளர் குழுவின் கவனத்தை பெற வாய்ப்புள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றால் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது விரட்டி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in