இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில்நியூஸி. வீரர்கள் நிதான ஆட்டம்

பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் நியூஸிலாந்து வீரர் டாம் லதாம்.படம்: ஏஎப்பி
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் நியூஸிலாந்து வீரர் டாம் லதாம்.படம்: ஏஎப்பி
Updated on
2 min read

வெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட்போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஹாரி புரூக் 186, ஜோ ரூட் 153, பென் ஸ்டோக்ஸ் 27 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட்களை இழந்து 138 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பிளண்டல் 25, சவுத்தி 23 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

பிளண்டல் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் கேப்டன் டிம் சவுத்தி அபாரமாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 49 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேட் ஹென்றி 6 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். இறுதியில் 53.2 ஓவர்களில் 209 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ்ஆண்டர்சன், ஜேக் லீச் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் 226 ரன்கள் பின்தங்கியதால் ஃபாலோ-ஆன் பெற்று 2-ம் இன்னிங்ஸை நியூஸிலாந்து விளையாடியது.

2-வது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் டாம்லதாம், டெவன் கான்வே ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.

நியூஸிலாந்து 149 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் முதல் விக்கெட் வீழ்ந்தது. 61 ரன்கள் எடுத்திருந்த டெவன் கான்வே ஆட்டமிழந்தார். டாம் லதாம் 172 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்த நிலையில் வீழ்ந்தார். வில் யங் 8 ரன்களுக்கு வீழ்ந்தார்.

3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் நியூஸிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்திருந்தது. கேன் வில்லியம்சன் 25 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 18 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில், 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து தொடங்கியது. 4-ம் நாள் உணவு நேர இடைவேளையின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்களை நியூஸிலாந்து எடுத்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in