

மெல்பர்ன்: இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் விரைவில் இணையவுள்ளார்.
காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைய உள்ளார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.