Published : 19 May 2017 09:19 AM
Last Updated : 19 May 2017 09:19 AM

வங்கதேசத்தை வீழ்த்தியது நியூஸிலாந்து அணி

3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து அணி.

அயர்லாந்தின் டப்ளின் நகரில் 3 நாடுகள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அயர்லாந்து, நியூஸிலாந்து, வங்க தேச அணிகள் கலந்து கொண்டுள் ளன. நேற்று முன்தினம் நடை பெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் நியூஸி லாந்து - வங்கதேசம் மோதின.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் 67 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். முஸ்பிஹூர் ரகிம் 55, மஹ்மதுல்லா 51, மோசடக் ஹோசைன் 41 ரன்கள் சேர்த்தனர்.

நியூஸிலாந்து அணி தரப்பில் பென்னெட் 3, இஷ் சோதி 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 258 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து 47.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.

டாம் லதாம் 54, நீஷாம் 52, நெய்ல் புரூம் 48 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் 51 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x