சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் - அரை இறுதியில் நுழைந்தார் சுமித் நாகல்

சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் - அரை இறுதியில் நுழைந்தார் சுமித் நாகல்
Updated on
1 min read

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 506-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 313-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் ஜே கிளார்க்குடன் மோதினார். ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் டேன் ஸ்வீனி 6-7, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஆர்தர் காசாக்ஸை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்றது. இன்று நடைபெறும் அரை இறுதி சுற்றில் சுமித் நாகல், 219-ம் நிலை வீரரான அமெரிக்காவின் நிக்கோலஸ் மோரேனோ டி அல்போரனை எதிர்த்து விளையாடுகிறார். இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-4, 6-7, 4-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னர், குரோஷியாவின் நினோ செர்டருசிக் ஜோடியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in