Published : 17 Feb 2023 06:27 AM
Last Updated : 17 Feb 2023 06:27 AM
மவுண்ட் மவுங்கனுயி: இங்கிலாந்து – நியூஸிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் மவுண்ட் மவுங்கனுயில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 58.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
பென் டக்கெட் 68 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ஹாரி புரூக் 81 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 89 ரன்களும் விளாசினர். நெய்ல் வாக்னர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 1, கேன் வில்லியம்சன் 6, ஹென்றி நிக்கோல்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவன் கான்வே 17, நெய்ல் வாக்னர் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2, ஆலி ராபின்சன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT