

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 28.7 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட் டுள்ள அறிக்கையில், “சாம்பி யன்ஸ் டிராபிக்கான மொத்த பரிசுத்தொகை அதிகரிக்கப்பட் டுள்ள நிலையில் இதில் பங்கேற் கும் 8 அணிகளில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும். 2-ம் இடம் பெறும் அணிக்கு 7 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும்.
அரையிறுதிச் சுற்றுவரை முன் னேறும் அணிகளுக்கு தலா 2.8 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும். லீக் சுற்றில் 3-வது இடம் பெறும் அணிகளுக்கு தலா 57 லட்சமும், கடைசி இடம் பெறும் அணிகளுக்கு 38 லட்ச ரூபாயும் பரிசளிக்கப்படும்” என்று குறிப் பிடப்பட்டுள்ளது.