Published : 16 Feb 2023 06:22 AM
Last Updated : 16 Feb 2023 06:22 AM
மும்பை: தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொண்ட ரகசிய புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா. இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
விராட் கோலி, கங்குலி இடையே ஈகோ பிரச்னைகள் இருந்தன. கிரிக்கெட் வாரியத்தை விடவும் தன்னை மிகப்பெரிய ஆளாக கோலி நினைத்துக் கொண்டார். யாரும் அவரைத் தொட முடியாது எனற எண்ணமும் அவருக்குஇருந்தது. தான் இல்லாவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட்டே இருக்காது என்றும் அவர் நினைத்தார்.
ஒரு வீரர், பிசிசிஐக்கு எதிராக செயல்படுவது அரிதான ஒன்று. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு விளையாட சென்றபோது, ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை மீடியா முன்பு வேண்டுமென்றே விராட் கோலிபேசினார். ஏனென்றால், தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கங்குலியே காரணம் என்று அவர் நினைத்திருந்தார். கங்குலிக்கு அவப் பெயரைஏற்படுத்த, தன்னை கேட்காமலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டார்கள் என்று கோலி கூறினார்.
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என்று விராட்கோலியிடம் கூறியதாக கங்குலிஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால், தன்னிடம் கங்குலி எதுவுமே கூறவில்லை என்று விராட் கோலி மீடியாக்களிடம் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருமுறை வீடியோ கான்ஃபரன்சில் பேசிக் கொண்டிருந்தபோது, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும்படி கங்குலி கோலியிடம் கூறினார்.
இந்த ஆலோசனையின் போது9 பேர் இருந்தோம். கங்குலி சொன்னதை கோலி சரியாக கவனித்தாரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விராட் கோலி எதற்காக அப்படி கூறினார் என்பதும் எங்களுக்கு தெரியாது.
முன்னணி வீரர்கள் 80 முதல் 85 சதவீத உடற்தகுதியுடன் இருந்தாலே அவர்கள், தங்களை விளையாட அனுமதிக்கும்படி கேட்பார்கள். ஒருபோதும் அவர்கள் விளையாட மறுப்பதுஇல்லை. காயம் அடையும் வீரர்கள் ஒருபோதும் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதில்லை.ஏனெனில் வலி நிவாரணி ஊக்க மருந்து தடுப்பு சோதனையின் கீழ் வருவதாகும். இதனால் இந்த பட்டியலில் இடம்பெறாத மருந்துகளை ஊசியாக செலுத்திக் கொள்வார்கள். இதை வீரர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
இவ்வாறு சேத்தன் சர்மா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT