WPL பணத்தில் அம்மா, அப்பாவுக்கு கொல்கத்தாவில் வீடு வாங்க வேண்டும்: ரிச்சா கோஷ்

ரிச்சா கோஷ் | கோப்புப்படம்
ரிச்சா கோஷ் | கோப்புப்படம்
Updated on
1 min read

டர்பன்: முதலாவது மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ரூ.1.9 கோடிக்கு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியுள்ளது. இந்நிலையில், அந்த தொகையை கொண்டு அவர் தனது அப்பா, அம்மாவுக்கு வீடு ஒன்று வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5 அணிகள் சார்பில் 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த 87 வீராங்கனைகளில் ஒருவர்தான் ரிச்சா. இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இவரது ஆட்டம் பெரிதும் உதவியது. அந்தப் போட்டியில் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார் அவர். விக்கெட் கீப்பர், அதிரடி பினிஷராகவும் அறியப்படுகிறார்.

“எனது உணர்வுகளை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. அது அனைத்தும் எனது மனதிற்குள் இருக்கிறது. குழந்தை பருவத்தில் அவள் மிகவும் சிரமங்களை எதிர் கொண்டிருந்தார்” என அவரது தந்தை மனபேந்திரா கோஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் தனது நீண்ட நாள் கனவு ஒன்றை நிஜம் செய்ய உள்ளேன். அது எனது பெற்றோருக்கு ஈடன் கார்டன் மைதானம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வாங்குவது என ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in