Published : 14 Feb 2023 06:25 AM
Last Updated : 14 Feb 2023 06:25 AM
சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று ஆடவருக்கான யு-19 அணிகள் பிரிவில் தமிழக அணி 3-0 என்ற கணக்கில் சத்தீஸ்கரை தோற்கடித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் கேரளாவையும் வென்றது தமிழக அணி. இதன் மூலம் எஃப் பிரிவில் 4 புள்ளிளுடன் தமிழக அணி முதலிடம் வகிக்கிறது.
சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகத்தின் பிரேயேஷ் ராஜ் 11-5, 11-8, 11-4 என்ற கணக்கில் கரண் மல்ஹோத்ராவையும் வருண் கணேஷ் 11-5, 11-6, 11-5 என்ற கணக்கில் ராம்ஜி குமாரையும் அபிநந்த் -11, 11-3, 11-3, 11-9 என்ற கணக்கில் விஷால் திகேத்தையும் வீழ்த்தினர். கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபிநந்த் 11-9, 9-11, 11-5, 11-6 என்ற கணக்கில் அமீர் அஃப்தாப்பையும், பிரேயேஷ் ராஜ் 11-5, 11-2, 11-4 என்ற கணக்கில் அதியா ஜோசப்பையும், வருண் கணேஷ் 11-3, 12-10, 11-6 என்ற கணக்கில் அன்சல் ஜேக் ஜானையும் தோற்கடித்தனர்.
‘ஏ’ பிரிவில் மேற்கு வங்கம், ‘பி’ பிரிவில் உத்தரபிரதேசம், ‘சி’ பிரிவில் டெல்லி, ‘டி’ பிரிவில் மணிப்பூர் ஆகிய அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT