இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றம்: பிசிசிஐ அறிவிப்பு

முதல் டெஸ்டில் இந்திய அணி
முதல் டெஸ்டில் இந்திய அணி
Updated on
1 min read

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலா HPCA மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது அந்தப் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மோசமான அவுட் ஃபீல்ட் காரணமாக போட்டி நடைபெறும் மாற்றப்படுவது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தர்மசாலா மைதானத்தில் நடைபெறவிருந்த இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ, "கடுமையான பனிப்பொழிவால் மைதானத்தில் போதிய அடர்த்தியுடன் புற்கள் இல்லை. அவை முழுமையாக வளர்ந்து மைதானம் தயாராக நாட்கள் ஆகலாம்" என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வது டெஸ்ட் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் வரும் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in