

ஒலிம்பிக் நீண்டதூர ஓட்டங்களில் (5000 மீ., 10,000 மீ. ஓட்டம்) இரு தங்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான இங்கிலாந்தின் மோ ஃபரா, போதிய உடற்தகுதியைப் பெறாததால் காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அடுத்த மாதம் ஜூரிச் நகரில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியைப் பெறும் நோக்கோடு விலகியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், “காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகுவது என எடுத்த முடிவு மிகக் கடினமானது. காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு இருந்தேன்.
ஆனால் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு எனது உடல் தயாராகவில்லை. அதனால் போட்டியிலிருந்து விலகுகிறேன். எனது சகநாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்ல எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.