Published : 10 Feb 2023 02:59 PM
Last Updated : 10 Feb 2023 02:59 PM
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 50+ ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார். 120 ரன்கள் எடுத்த நிலையில் அவர் தனது விக்கெட்டை இழந்தார்.
இந்தப் போட்டி நேற்று துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 177 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தை 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தை அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா தொடங்கினர். இருவரும் 42 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அஸ்வின் 62 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த புஜாரா, கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் என அனைவரும் விரைந்து தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். மறுமுனையில் ரோகித் நிலைத்து நின்று ஆடி வந்தார்.
7-வது பேட்ஸ்மேனாக களம் கண்ட ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்தார் ரோகித். இருவரும் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9-வது சதத்தை பதிவு செய்தார் ரோகித். 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து அவர் அவுட்டாகி இருந்தார்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வீரர் மர்பி அபாரமாக பந்து வீசி ராகுல், அஸ்வின், புஜாரா, கோலி மற்றும் கே.எஸ்.பரத் ஆகியோரை வெளியேற்றினார். இரண்டாம் நாள் தேநீர் நேர இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.
தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 50+ ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், மூன்றாவது செஷன் துவங்கியதும் ரோகித் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அறிமுக வீரர் கே.எஸ்.பரத்தும் தனது விக்கெட்டை இழந்தார். தற்போது 83.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT