

லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9-வது அகில இந்திய ஹாக்கி போட்டி, கோவில்பட்டியில் நாளை (மே 5) தொடங்குகிறது.
கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணைய செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், நாளை மாலை 5 மணியளவில் தொடக்க விழா நடைபெறுகிறது.
இந்த தொடரில் கபுர்தாலா ஆர்சிஎப், பெங்களூரு கனரா வங்கி, பெங்களூரு ராணுவ லெவன், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே, டெல்லி ஓஎன் ஜிசி, மும்பை இந்திய கடற்படை, டெல்லி மத்திய தலைமைச் செய லக அணி, ஹாக்கி பெங்களூரு, போபால் சாய் அணி, ரூர்கேலா விளையாட்டு விடுதி, ஜலந்தர் இஎம்ஈ கார்பஸ், தமிழ்நாடு லெவன், புவனேஸ்வர் இசிஆர், சென்னை ஐஓபி, மகாராஷ்டிரா போலீஸ் மற்றும் கோவில்பட்டி லட்சுமி விளையாட்டு அகாடமி ஆகிய 16 அணிகள் பங்கேற்கின்றன.