அபுதாபி ஓபன் தொடரில் சானியா ஜோடி தோல்வி

அபுதாபி ஓபன் தொடரில் சானியா ஜோடி தோல்வி
Updated on
1 min read

அபுதாபி: அபுதாபி ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மேடக் சாண்ட்ஸ் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மேடக் சாண்ட்ஸ் ஜோடியானது பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிஃலிப்கென்ஸ், ஜெர்மனியின் லாரா சீக்மண்ட் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா, பெத்தானி மேடக் ஜோடி 3-6, 4-6 என் நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சானியா மிர்சா, சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து வரும் 19-ம் தேதி தொடங்கும் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்புடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in