

சென்னை: 21-வது ஆசிய ஜூனியர் அணி ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் மற்றும் டிரையத்லான் அகாடமியில் இன்று தொடங்குகிறது.
வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் சீன தைபே, ஹாங்காங், ஜப்பான், கொரியா, குவைத், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை ஆகிய 10 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்திய ஆடவர் அணியில் கிருஷ்ணா மிஸ்ரா, பார்த் அம்பானி, ஷரன் பஞ்சாபி, சவுர்யா பாவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மகளிர் அணியில் அனாஹத் சிங், பூஜா ஆர்த்தி, தியானா பரஸ்ரம் பூரியா, யுவ்னா குப்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.