Last Updated : 22 May, 2017 09:55 AM

 

Published : 22 May 2017 09:55 AM
Last Updated : 22 May 2017 09:55 AM

கோப்பை வென்றது இந்திய மகளிரணி

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற 4 நாடுகள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.

போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த் தியது. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 40.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக லஸ் 55 ரன்கள் எடுத்தார். ஜுலன் கோஸ்வாமி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பூனம் ராவத் 70, மிதாலி ராஜ் 62 ரன்கள் எடுத்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது.

----------

அலெக்சாண்டர் ஜிவெரேவ் சாம்பியன்

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிப் போட்டி யில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை, வீழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஜிவெரேவ் சாம்பியன் பட்டம் வென் றார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 20 வயதான ஜிவெரேவ் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடிய 17-ம் நிலை வீரரான ஜிவெரேவ், ஜோகோவிச்சை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x