

கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக துணைத் தலைவர் சி.என்.அசோக், செயலாளர் சிரில் இருதயராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
நாச்சிமுத்து கவுண்டர் கோப் பைக்கான 52-வது தேசிய ஆடவர் கூடைப்பந்துப் போட்டி மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக் கான 16-வது தேசிய மகளிர் கூடைப்பந்துப் போட்டி கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நாளை (26-ம் தேதி) தொடங்கு கிறது. இந்த போட்டிகள் வரும் 31-ம் தேதி வரை நடைபெறும்.
ஆடவர் பிரிவில் சென்னை வருமான வரி அணி, டெல்லி இந்திய விமானப்படை, குஜராத் விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், டெல்லி சி.ஆர்.பி.எஃப். சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டெல்லி இந்தியன் ரயில்வே, லோனாவாலா இந்தியன் கப்பல் படை அணி, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணி ஆகியவை பங்கேற்கின்றன.
மகளிர் பிரிவில் செகந்தி ராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி, சென்னை தெற்கு ரயில்வே, கொல்கத்தா கிழக்கு ரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், திருவனந்தபுரம் கேரள மின் வாரியம், சத்தீஸ்கர் மாநில அணி, கவுகாத்தி வடக்கு பிரண்டிர் ரயில்வே, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணி ஆகியவை பங்கேற் கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.