

சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய வீரர் மன்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
மலேசியாவின் இபோ நகரில் 26-வது சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடர் நடைபெற்று வரு கிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்தி ரேலியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள் இந்த தொடரில் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் நேற்று ஜப்பானை எதிர்த்து விளையாடியது.
ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை ரூபிந்தர்பால் சிங் கோலாக மாற்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த 4-வது நிமிடத்தில் ஜப்பான் பதிலடி கொடுத்தது. கஸ்மா முரடா பீல்டு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையானது.
43-வது நிமிடத்தில் ஜப்பான் அணி 2-வது கோலை அடித்தது. பீல்டு கோலான இதை யோஷிஹரா அடிக்க அந்த அணி 2-1 என முன்னிலைப் பெற்றது. எனினும் அடுத்த இரு நிமிடங்களில் இந்தியாவின் மன்தீப் சிங் பீல்டு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
அடுத்த நொடியே ஜப்பான் அணி 3-வது கோலை அடித்து அதிர்ச்சி கொடுத்தது. மிடானி அடித்த இந்த கோலால் ஜப்பான் 3-2 என முன்னிலை வகித்தது. ஆட் டம் முடிவடைய 10 நிமிடங்களே இருந்த நிலையில் மன்தீப் சிங் அபாரமாக விளையாடி இரு கோல்கள் அடித்தார்.
51 மற்றும் 58-வது நிமிடங் களில் அவர் அடித்த இரு கோல் களால் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தோல்வியடைவதில் இருந்து தப்பித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 7 புள்ளி களுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.