இந்திய அணிக்கு புதிய சீருடை

இந்திய அணிக்கு புதிய சீருடை
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடையை மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி அறிமுகம் செய்துவைத்தார்.

சீருடையின் முன் பகுதியில் புதிய ஸ்பான்சரான சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான ஓப்போ செல்போனின் பெயர் இடம் பெற்றுள்ளது. வரும் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்த புதிய சீருடை அணிந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீருடையை அறிமுகம் செய்து வைத்து ராகுல் ஜோஹ்ரி கூறும்போது, “இந்திய அணி உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. ஓப்போ நிறுவனம் எங்கள் மீதும், இந்திய கிரிக்கெட் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. கிரிக்கெட் வளர நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறேன்” என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஓப்போ கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்திய அணியின் ஸ்பான்ஸராக ஓப்போ இருக்கும். இதற்காக அந்த நிறுவனம் ரூ.1,079 கோடி தொகையை பிசிசிஐ-க்கு செலுத்தி உள்ளது.

இது கடந்த முறை ஸ்பான்சராக இருந்த ஸ்டார் இந்தியா கொடுத்த கட்டணத்தை விட 5 மடங்கு அதிகமாகும். மேலும் இது 2-வது அதிகபட்ச தொகையும் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக ஸ்பான்சர் உரிமையை விவோ நிறுவனம் ரூ.768 கோடிக்கு வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீருடை அறிமுக நிகழ்ச்சியில் பிசிசிஐ நிர்வாகிகள் குழுவை சேர்ந்த டயானா எடுல்ஜி மற்றும் வாரிய பொது மேலாளார்கள் ரத்னாகர் ஷெட்டி, தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in