

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ ஸ்ரீதர், அமன்ஜித் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டி யில் கொலம்பியாவை எதிர் கொண்டது. இதில் 226-221 என்ற புள்ளிகள் கணக்கில் கேமிலோ ஆந்த்ரேஸ் கார்டோனா, ஜோஸ் கார்லோஸ், டேனியல் முனோஸ் ஆகியோரை கொண்ட கொலம் பிய அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.