

சென்னை: நெதர்லாந்தின் ஹார்லெம் நகரில் வரும் மார்ச் 1 முதல் 5-ம் தேதி வரை நெதர்லாந்து ஜூனியர் சர்வதேச பாட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மார்ச் 8 முதல் 12-ம் தேதி வரை ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஜெர்மன் ஜூனியர் பாட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது. இந்த இரு தொடர்களிலும் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த ரக்ஷிதா ஸ்ரீ, ஸ்ரீநிதி அருள்முருகன், சானியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரக்ஷிதா ஸ்ரீ மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாட உள்ளார். இவருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அருள் முருகன் களமிறங்குகிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் தெலங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவியுடன் இணைந்து சானியா விளையாட உள்ளார்.