

கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கபுர்தாலா ஆர்.சி.எப். அணி 8-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா மாநில போலீஸ் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே - ஒடிசா கிழக்கு கடற்கரை ரயில்வே மோதிய ஆட்டம் 1 - 1 என டிராவில் முடிவடைந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் செகந்திராபாத், தெற்கு மத்திய ரயில்வே அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மற்ற கால் இறுதி ஆட்டங்களில் டெல்லி ஓஎன்ஜிசி 5-0 என்ற கோல் கணக்கில் ஜலந்தர் இஎம்இ கார்பஸ் அணியையும், ஆர்மிலெவன் 5-2 என்ற கணக்கில் சாய் போபால் அணியையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின.