Published : 01 Feb 2023 05:59 AM
Last Updated : 01 Feb 2023 05:59 AM
ஈஸ்ட் லண்டன்: மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்திய மகளிர் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நேற்று முன்தினம் ஈஸ்ட் லண்டனில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 5, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42, ஹர்லீன் தியோல் 13, ஹர்மன்பிரீத் கவுர் 32 ரன்கள் எடுத்தனர். ஆட்டநாயகியாக தீப்தி ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இறுதிச் சுற்று ஆட்டம் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT