அஸ்லன் ஷா ஹாக்கி தொடர்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா

அஸ்லன் ஷா ஹாக்கி தொடர்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா
Updated on
1 min read

சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடரில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது.

மலேசியாவின் இபோ நகரில் 26-வது சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடர் நடைபெற்று வரு கிறது. 6 நாடுகள் கலந்து கொண் டுள்ள இந்த தொடரில் தரவரிசை யில் 6-வது இடத்தில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது.

முதல் கால் பகுதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 25-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்தது. ஹர்மான்பிரித் அடித்த பீல்டு கோலால் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது. அடுத்த 5-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது.

அந்த அணியின் வீரர் எடி ஓகென்டன் பீல்டு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 34-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா 2-வது கோலை அடித்தது. பீல்டு கோலாக அமைந்த இதை, டாம் கிரேய்க் அடித்தார். இதனால் ஆஸ்திரேலியா 2-1 என வலுவான முன்னிலையைப் பெற்றது.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்திலும் ஆஸ்திரேலிய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 51-வது நிமிடத்தில் மேலும் ஒரு பீல்டு கோலை ஆஸ்திரேலியா அடித்தது. இந்த கோலை டாம் விக்ஹாம் அடித்தார். கடைசி வரை போராடியும் இந்திய வீரர்களால் மேற்கொண்டு ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 9 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அந்த அணி நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தை 1-1 என டிராவில் முடித்திருந்தது. 2-வது ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்திருந்தது.

இந்திய அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட் டத்தை 2-2 என டிரா செய்திருந் தது. 2-வது ஆட்டத்தில் நியூஸி லாந்தை 3-0 என வென்றிருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in