

மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 சமநிலையில் இருந்தது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் நேற்று டொமினிகாவில் தொடங்கியது.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி மதிய உணவு இடைவேளையில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரரான ஷான் மசூத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அசார் அலி 36, பாபர் அசாம் 24 ரன் களுடன் களத்தில் இருந்தனர். உணவு இடை வேளையின் போது மழை பெய்ததால் அதன் பின்னர் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.