Last Updated : 28 Dec, 2016 10:25 AM

 

Published : 28 Dec 2016 10:25 AM
Last Updated : 28 Dec 2016 10:25 AM

உலக சாம்பியன்ஷிப்பை குறிவைக்கும் பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள் ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து வுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் சிந்துவுக்கு ரூ.30 லட்சத் துக்கான காசோலையை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் என்.ராமசந்திரன் வழங்கினார்.

இதைதொடர்ந்து செய்தியாளர் களிடம் சிந்து கூறியதாவது:

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள் ளது. அனைவரது கவனமும் என் மீது உள்ளது. நாட்டுக்காக நான் மேலும் சாதிக்க வேண்டும் என எதிர் பார்க்கின்றனர். ஆனால் அதிக நெருக்கடியை ஏற்படுத்தி விடக் கூடாது என எனக்கு நானே கூறிக் கொள்வேன். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது நோக்கம்.

ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சூப்பர்சீரிஸ் பட்டம் வென்றுள்ளேன். ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறேன். அடுத்து பிரிமீயர் பாட்மிண்டன் லீக் தொடரில் விளையாட உள்ளேன். இதை தொடர்ந்து சையது மோடி தொடர் மற்றும் ஒருசில சூப்பர்சீரிஸ் தொடர்களில் பங்கேற்கிறேன். ஆல் இங்கிலாந்து மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

பிரிமீயர் பாட்மிண்டன் லீக் தொடரில் இம்முறையும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்காக விளை யாடுகிறேன். இம்முறையும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

11 புள்ளிகள் கொண்ட போட்டியானது முற்றிலும் மாறுபட்டது. 21 புள்ளிகள் கொண்ட போட்டியில் பின்னடைவை சந்தித்தால் மீண்டு வர நேரம் இருக்கும். ஆனால் 11 புள்ளிகள் கொண்ட போட்டியில் ஆரம்பம் முதலே எச்சரிக்கையாகவும் அதே சமயத்தில் விரைவாகவும் புள்ளி களை குவிக்கவேண்டும். ஏனெனில் சிந்தித்து செயல்படுவதற்கு காலஅவகாசம் இருக்காது.

இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x