ஐஎஸ்எல் முதல் கட்ட அரை இறுதியில்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

ஐஎஸ்எல் முதல் கட்ட அரை இறுதியில்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா
Updated on
1 min read

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல் கட்ட அரை இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா- மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. இரு அணிகளும் 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கியது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கொல்கத்தா முதல் கோலை அடித்தது. போர்ஜா பெர்னாண்டஸ் உதவியுடன் இந்த கோலை ரால்டி அடித்தார். இதனால் கொல்கத்தா 1-0 என முன்னிலை பெற்றது.

10-வது நிமிடத்தில் மும்பை அணி பதிலடி கொடுத்தது. லியோ கோஸ்டா அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 19-வது நிமிடத்தில் மும்பை தனது 2-வது கோலை அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரரான புளோரன் உதவி யுடன் இந்த கோலை வையரா அடித்தார். இதனால் மும்பை 2-1 என முன்னிலை வகித்தது.

39-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் சமீக் டூட்டி உதவியுடன் இயன் ஹூமி கோல் அடித்து 2-2 என சமநிலையை எட்ட செய்தார். 45-வது நிமிடத்தில் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய இயன் ஹூமி கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் கொல்கத்தா 3-2 என முன்னிலை வகித்தது.

2-வது பாதியில் மும்பை அணியின் கோல் அடிக்கும் முயற்சி களுக்கு பலன் கிடைக்காமல் போனது. அதேவேளையில் கொல் கத்தா அணி தடுப்பாட்டத்தில் கூடு தல் கவனம் செலுத்தியது. முடி வில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

இரு அணிகளும் தங்களது 2-வது கட்ட அரை இறுதியில் வரும் 13-ம் தேதி மும்பையில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் அடிக்கப்படும் கோல்களையும் சேர்த்து சராசரியின் அடிப்படையில் எந்த அணி முன்னிலை பெறுகிறதோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு கொச்சியில் நடைபெறும் முதல் கட்ட அரை இறுதியில் கேரளா பிளாஸ்டர்ஸ்- டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in