Published : 28 Jan 2023 06:39 AM
Last Updated : 28 Jan 2023 06:39 AM
ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வி அடைந்தார்.
ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளஇந்தியாவின் லக்சயா சென், ஆசிய விளையாட்டு சாம்பியனும் 3-ம் நிலைவீரரருமான ஜோனதான் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-15, 10-21, 13-21என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT