

ராஞ்சி: இந்தியா மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை நேரில் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராஞ்சி மைதானத்திற்கு வந்துள்ளார். அவரை மைதானத்தில் உள்ள பெரிய திரையில் காண்பித்ததும் ரசிகர்கள் ‘தோனி.. தோனி..’ என முழங்கினர்.
தோனி, இந்திய அணியின் கேப்டனாக ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்றவர். மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் அவர் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. கிரிக்கெட் உலகில் ஐசிசி நடத்தும் மூன்று தொடர்களையும் வென்ற ஒரே கேப்டன் என அவர் அறியப்படுகிறார்.
அதேபோல தலைசிறந்த வீரராகவும் தோனி அறியப்படுகிறார். பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சியில் தோனி வல்லவர். அவரது சொந்த ஊர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிதான். நேற்று இந்திய வீரர்களை சந்தித்து அவர் பேசிய நிலையில் இன்று போட்டியை காண மைதானத்திற்கு வந்துள்ளார் அவர். தோனி உடன் அவரது மனைவி சாக்ஷி தோனியும் வந்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 176 ரன்கள் எடுத்துள்ளது.