

நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆடவில்லை, பாகிஸ்தானுக்காக ஆடினேன் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
அதாவது தனக்கு பிரியாவிடை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக எழுந்த செய்திகளை அடுத்து அப்ரிடி இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் அணிக்காக நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறேனே தவிர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கா ஆடவில்லை.நான் ஓய்வு பெற விரும்புவதாக வும், எனக்கு விடை கொடுக்கும் வகையில் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நான் கேட்டுள்ளதாகவும் சில செய்திகள் வந்துள்ளன. அவை உண்மை அல்ல. எந்த கட்டத்திலும் யாரிடமும் எதையும் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் நான் இல்லை.
எனது நலம்விரும்பிகளும், ரசிகர்களும் எனக்கு அளித்து வரும் ஆதரவே எனக்கு போதுமான பரிசு. இப்போதைக்கு நான் கிரிக்கெட் டில் இருந்து ஓய்வு பெறுவதாக இல்லை. என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. பாகிஸ்தான் அணிக்காக இன்னும் சிறப் பாக ஆடமுடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் என்னை அணியில் சேர்ப்பதும் சேர்க் காததும் தேர்வுக்குழுவினரின் விருப்பம்” என்றார் அப்ரிடி.
முதலில் பிரியாவிடை போட்டியில் ஆட விருப்பம் தெரிவித்திருந்தார் அப்ரிடி. ஆனால் கிரிக்கெட் வாரியம் இதனை ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதன் பிறகு தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இன்னும் பாகிஸ்தானுக்காக ஆடுவேன் என்று கூறிவருகிறார்.