

முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு வெளியேறிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமை அர்ஜென்டீனா வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
”விளையாட்டில் மெஸ்ஸியின் வரலாறு மிக முக்கியமானது, அவர் நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறார். இதையும் வெல்ல அவருக்காக நான் விரும்புகிறேன். அவர் எனது நண்பர், பார்சிலோனா அணியில் எனது சகா, கோப்பையை வெல்ல அவருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார் நெய்மார்.
ஆனால் அந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் அதனை விரும்பவில்லை. நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டீனா அணி இறுதிக்குள் நுழைந்ததை ஓ டயா என்ற செய்தித் தாள், “துர்கனவு தொடர்கிறது’ என்று வர்ணித்துள்ளது.
இறுதிப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் அர்ஜென்டீன ரசிகர்கள் மைதானத்திற்குப் படையெடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அர்ஜென் டீனா வென்றால் இது 3வது உலகக் கோப்பையாகும்.
இதற்கிடையே மெஸ்ஸியை நெதர்லாந்து அணி அன்று சாதுவாக வைத்திருந்தது. நாங்களும் அவருக்காக சில சிறப்பு உத்திகளை வைத்திருக்கிறொம் என்று ஜெர்மனி அணியின் உதவி பயிற்சியாளர் கூறியுள்ளார்.