Published : 05 Dec 2016 09:34 AM
Last Updated : 05 Dec 2016 09:34 AM

ஐஎஸ்எல் கால்பந்து: அரையிறுதியில் கேரளா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கொச்சியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ் டர்ஸ் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியை எதிர்த்து ஆடியது. இப் போட்டியில் டிரா செய்தாலே அரை யிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறலாம் என்பதால் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கேரள அணி தற்காப்பு ஆட்டம் ஆடியது.

இந்நிலையில் ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் கேரள வீரர் வினீத் கோல் அடித்து கேரளாவை 1-0 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் கேரள அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x