நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் வெற்றி

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் வெற்றி
Updated on
2 min read

எஸ்எல் தொடரில் நேற்று முன்தினம் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் கொல்கத்தா அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணி 13 ஆட்டத் தில் 4 வெற்றி, 7 டிரா, 2 தோல்வி களுடன் 19 புள்ளிகள் பெற்று அரை இறுதியில் கால் பதித்துள்ளது. 16 கோல்கள் அடித்துள்ள நிலையில் 14 கோல்கள் வாங்கிய அந்த அணியின் கோல்கள் வித்தியாசம் +2 ஆகும். கொல்கத்தா ஆட் டத்தை டிராவில் முடித்ததால் டெல்லி அணியும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படை யில் அரை இறுதிக்கு முன் னேறியது. மும்பை அணி ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

அந்த அணி 13 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 டிரா, 3 தோல்விகளுடன் பட்டியலில் 22 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத் தக்கது. 3 அணிகள் அரை இறுதியில் நுழைந்த நிலையில் கடைசி அணியாக தகுதி பெறுவதில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையே போட்டி நிலவியது.

இந்நிலையில் 15 புள்ளிகளுடன் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி தனது 13-வது ஆட்டத்தில் நேற்று டெல்லி டைனமோஸ் அணியுடன் மோதியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 60-வது நிமிடத் தில் செட்யாஷென் சிங் கோல் அடிக்க நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் 1-0 என முன்னிலை பெற்றது. ராபர்ட் ஹெல்லன் உதவியுடன் 71-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிக்காக கோபி 2-வது கோலை அடித்தார்.

டெல்லி வீரர் பெரேரா கடைசி நிமிடத்தில் கோல் அடித்தார். எனி னும் அது வெற்றிக்கு கைகொடுக்க வில்லை. முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் 2-1 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்று 18 புள்ளி களுடன் அரை இறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொண் டது. வரும் 4-ம் தேதி நடைபெறும் கடைசி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்-கேரளா அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெற்றால் மட்டுமே நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அரை இறுதிக்கு முன்னேற முடி யும். 19 புள்ளிகளுடன் உள்ள கேரள அணி இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே அரை இறுதியில் நுழைந்துவிடும்.

இதற்கிடையே கோவாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி-எப்சி கோவா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டதால் இந்த ஆட்டம் சம்பிரதாயமாகவே இருக்கும். எனினும் கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க இரு அணிகள் இடையே போட்டி நிலவக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in