

இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி தொடரை 0-4 என இழந்தது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் கூறியதாவது:
தோல்விகளுக்கு சாக்கு போக்கு கூற விரும்பவில்லை. இந்தியா நிச்சயம் சிறந்த அணி. வெற்றிபெறத் தகுதியானது. ஆடுகளத்தில் பந்துவீச்சாளர் களின் காலடித்தடங்களிலிருந்து பந்துகள் திரும்பின. ஆனால் விக்கெட்கள் இந்த அளவுக்கு சரியும் வகையில் ஒன்றுமில்லை.
இந்திய அணியின் பேட்டிங் கின் போது முக்கியமான வாய்ப்புகளை தவற விட்டோம். அதற்காக இந்திய அணி எங்க ளுக்கு தண்டனை அளித்துள்ளது. விராட் கோலிக்குப் பாராட்டுகள்.
எங்களைப் பொறுத்தவரை தவற விட்ட வாய்ப்புகள், நழுவ விட்ட கேட்ச்களுக்கான தொடராக இது அமைந்தது. போதிய ரன்களை அடிக்க முடியாத நிலை யில் போதிய விக்கெட்களையும் வீழ்த்த முடியவில்லை. இந்தியா வில் விளையாடுவது கடின மானதுதான். இவ்வாறு கூறினார்.