

மும்பை: மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான ஏலம் மும்பையில் நாளை நடைபெறுகிறது. 5 அணிகளுக்களான உரிமங்களின் வாயிலாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வருமானத்தை ஈட்ட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி ஒவ்வொரு அணியின் உரிமமும் ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை ஏலம் கேட்கப்படக்கூடும். இது ரூ.800 கோடி வரை செல்லக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 5 அணிகளின் உரிமங்களை பெறுவதற்காக அதானி குழுமம், டோரண்ட் குழுமம், ஹால்டிராம், கோடக், ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. மேலும் ஆடவர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் மகளிர் ஐபிஎல் அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மகளிர் ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது.